பெரியார்1000 பற்றிய அறிமுகம்

( தந்தை பெரியார் அவர்கள் )

( 17-09-1879 - 24-12-1973 )அதிக மாவணர்கள் பங்கேற்ற மாவட்டங்கள்


மதிப்பெண்களைக் குவித்த மேல் நிலைக் கல்வி மாணவர்கள்

'பெரியார் 1000' ஒரு பார்வை...

    "பெரியார் தம் தத்துவங்கள், வாழ்க்கை நிகழ்வுகள், அவரது பொதுத் தொண்டு, கொள்கைப் பயணம் ஆகியவை பற்றி இளைய தலைமுறையினரும் அறிந்து அவர் வழி நடப்பது அவசர, அவசிய தேவையாகும்.

அதை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் வெளிவரும் இந்த பெரியார் 1000 என்ற வினா-விடை நூல் ஒரு அறிய தொகுப்பாகும்", என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் 1000 நூல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதை செயலாக்கிடும் வகையில், கடந்த 2011ஆம் ஆண்டு இப்போட்டி வடசென்னையில் 100 மாணவர்கள் பங்கேற்கும் வகையில் தொடங்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 60 இடங்களில் நடைபெற்ற இப்போட்டியில் 17,000 மாணவர்கள் பெரியார் 1000 நூலைப் படித்து தேர்வெழுதினார்கள். கடந்த 2013ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் 120 இடங்களில் இப்போட்டி நடத்தப்பட்டு 67,000 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியது இயக்க வரலாற்றில் ஒரு சாதனை மைல் கல்லாகும். மேலும், கடந்த ஆண்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் 'பெரியார் 1000' நூல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இளைய தலைமுறையினரிடம் பெரியாரை கொண்டு சேர்க்கும் இப்பெரும் பணிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆண்டு (2014) மேலும் ஒரு போட்டிப் பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது.இப்போட்டியினை இந்த ஆண்டு கூடுதல் சிறப்புடன் நடத்துவதற்கு கீழ்காணும் வகையில் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு சிறப்பம்சங்கள்


போட்டிப் பிரிவு-1 : பெரியார் 1000

பங்கேற்க தகுதி : 6ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
பதிவுக் கட்டணம் : நிரப்பிய விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணத்தை (ரூ.50/-) மாவட்டப் பொறுப்பாளரிடம் செலுத்த வேண்டும்.
தேர்வு மொழி : தமிழ் அல்லது ஆங்கிலம்.
தேர்வுக்குரிய பாடம் : பெரியார் 1000 நூலிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

போட்டிப் பிரிவு -2 : பெரியார் சிந்தனைகள்

பங்கேற்க தகுதி : 10ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
பதிவுக் கட்டணம் : நிரப்பிய விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணத்தை (ரூ.100/-) மாவட்டப் பொறுப்பாளரிடம் செலுத்த வேண்டும்.
தேர்வு மொழி : தமிழ்.
தேர்வுக்குரிய பாடம் : பெரியார் சிந்தனைகள் நூலிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.