பெரியார்1000 பற்றிய அறிமுகம்

'பெரியார் 1000' ஒரு பார்வை...

    "பெரியார் தம் தத்துவங்கள், வாழ்க்கை நிகழ்வுகள், அவரது பொதுத் தொண்டு, கொள்கைப் பயணம் ஆகியவை பற்றி இளைய தலைமுறையினரும் அறிந்து அவர் வழி நடப்பது அவசர, அவசிய தேவையாகும்.

அதை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் வெளிவரும் இந்த பெரியார் 1000 என்ற வினா-விடை நூல் ஒரு அறிய தொகுப்பாகும்", என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் 1000 நூல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதை செயலாக்கிடும் வகையில், கடந்த 2011ஆம் ஆண்டு இப்போட்டி வடசென்னையில் 100 மாணவர்கள் பங்கேற்கும் வகையில் தொடங்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 60 இடங்களில் நடைபெற்ற இப்போட்டியில் 17,000 மாணவர்கள் பெரியார் 1000 நூலைப் படித்து தேர்வெழுதினார்கள். கடந்த 2013ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் 120 இடங்களில் இப்போட்டி நடத்தப்பட்டு 67,000 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியது இயக்க வரலாற்றில் ஒரு சாதனை மைல் கல்லாகும். மேலும், கடந்த ஆண்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் 'பெரியார் 1000' நூல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2014 இல் பெரியார் 1000 வினா விடைத் தேர்வு மிகச்சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த 23.8.2014 அன்று தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 61 மாவட்டங்களில் நடத்தி தேர்வு முடிவுகளையும் பரிசு பெற்றவர்கள், சிறப்புப் பரிசுப் பெற்றவர்கள் ஆகியவர்களின் விவரங்களை தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று வெளியிட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. ஆனால் பெற்றோர், மாணவர்கள் அனைவரிடமும் பெரியார் 1000 ஏற்படுத்தியிருந்த தாக்கமும், வீச்சும் அதன் காரணமாக ஏற்பட்டிருந்த எழுச்சியும் திட்டமிடாத புதிய பகுதிகளிலும் தேர்வைத் தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயம் உண்டானது. தவிர்க்க முடியாமல் அந்தப்பகுதிகளிலும் தேர்வை நடத்தியதால், அனைத்து முடிவுகளையும் வெளியிடும் நாள் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்டு மாதத்திலேயே தேர்வை எழுதிவிட்ட மாணவர்கள், பொதுத் தேர்வுகளின் மீதிருக்கும் ஆர்வத்தை விடவும் அதிகமான எதிர்ப் பார்போடு தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள காத்திருந்தனர். தங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்த இய லாமல் ஏற்கெனவே அறிவித்திருந்த periyarquiz.com இணைய தளத்திற்கு சென்றும், ஒருங்கிணைப்பாளர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்டுத் தெரிந்து கொள்வதுமாக இருந்தனர்.

ஒரு வழியாக மற்ற இடங்களிலெல்லாம் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பெற்றது. விடைத்தாள்கள் உரிய வகையில் கணினி மூலமாக திருத்தம் செய்யப்பட்ட நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடு வது எனமுடிவு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடுவது பற்றி உரிய அறிவிப்பு விடுதலையில் வெளி யிடப்பட்டது. இந்த அறிவிப்புகள் வெளியான நாளிலிருந்து அதை வெளியிடுவதற்கான இணையதளப் பணிகளை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், பெரியார் வலைக் காட்சியும் ஒருங்கிணைந்து செய்து முடித்தனர். திட்ட மிட்டபடி அதாவது நவம்பர் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவுகள் periyarquiz.com இணையதளத்தில் வெளியிடப் பட்டன, வெளியிடப்பட்ட 1 மணி நேரத்திலேயே ஆயிரக் கணக்கான மாணவர்கள் இந்த இணையதளத்திற்கு இடைவிடாமல் படையெடுத்த வண்ணம் இருந்தனர். அதுமட்டுமல்ல இந்த மாபெரும் ஏற்பாட்டைப் பாராட்டி மாணவர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர். மாணவர்களின் சிறந்த கருத்துகள் அதே இணையதளத்தில் Scrolling முறையில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் பிறகு மதிப்பெண்கள் மாவட்ட வாரியாக வும் தரவரிசைப்படியும் பிரிக்கப்பட்டு மாவட்ட ஒருங் கிணைப்பாளர்களுக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக மாநில வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பற்றிய தகவல்கள் படிப்படியாக நாளையிலி ருந்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வத்துடன் இணையத்தில் குவியும் மாணவர்கள்!

மாணவர்கள் periyarquiz.com க்குள் நுழைந்து வெறுமனே தேர்வு முடிவுகளை பார்த்துவிட்டு செல்வதோடு இல்லாமல் மாணவர்கள் தம் கருத்துகளை பதிவிடவும் இந்த பக்கத்தில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் மிகுந்த உற்சாகமாக தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தேர்வு முடிவுகள் மிகுந்த எளிய முறையில் பார்வையிடும்படி periyarquiz.com வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர் தங்கள் பதி வெண்ணை பதிந்ததும் அந்த எண்ணை சரிபார்க்கும் வாய்ப்பு தரப் பட்டிருக்கும். உள்ளே நுழைவதற்கு முன் மாணவர்களின் பெயர், (விடைத்தாளில் அச்சிடப்பட்டி ருந்த ஆறு இலக்க எண்) முகவரி, நிரப்பும் படிவம் இருக்கும். அதை முறைப்படி நிரப்புபவர்களுக்கு பெரியார் பிஞ்சு சிறப்பிதழ் ஒன்று அனுப்பப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாண வரும் தம் மதிப்பெண்ணை அச்செடுக்கும் வசதியுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழும் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏராளமானோர் இந்த இணைய தளத்திற்கு வந்து தங்கள் தங்கள் முடிவுகளை பார்த்துச் சென்றவண்ணம் இருக்கின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது. மதிப்பெண்களைக் குவித்த மேல் நிலைக் கல்வி மாணவர்கள் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு பிரிவாக பெரியார் 1000 புத்தகத்திலிருந்தும், 10முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவ்வாண்டு முதல் புதிய இரண்டாம் பிரிவாக சிந்தனைச் சோலை புத்தகத்திலிருந்தும் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 50விழுக்காட்டுக்கு மேல் எடுத்த மாணவர்களின் ஒப்பீட்டு விவரம் இங்கே தரப்பட்டுள்ளது.

இளைய தலைமுறையினரிடம் பெரியாரை கொண்டு சேர்க்கும் இப்பெரும் பணிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆண்டு (2015) நடத்துவதற்கு கீழ்காணும் வகையில் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு சிறப்பம்சங்கள்


போட்டிப் பிரிவு-1 : பெரியார் 1000

பங்கேற்க தகுதி : 6ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணம் (ரூ.50/)-அய் செலுத்தி மாவட்டப் பொறுப்பாளரிடம் போட்டிக்கான குறிப்பேடுகளை பெற்றுக்கொள்ளவும்.
தேர்வுக்குரிய பாடம் : பெரியார் 1000 நூலிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.இந்நூலில் மாதிரி வினாத்தாள்,மாதிரி விடைத்தாள்,போட்டி பற்றி விபரம் மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மொழி : தமிழ் / ஆங்கிலம் / பிரஞ்சு.

போட்டிப் பிரிவு -2 : சிந்தனைச் சோலை பெரியார்

பங்கேற்க தகுதி : 9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
பதிவுக் கட்டணம் :பதிவுக் கட்டணம் (ரூ.100/)-அய் செலுத்தி மாவட்டப் பொறுப்பாளரிடம் போட்டிக்கான குறிப்பேடுகளை பெற்றுக்கொள்ளவும்.
தேர்வுக்குரிய பாடம் : பெரியார் சிந்தனைகள் நூலிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
தேர்வு மொழி : தமிழ்.