இந்த ஆண்டு சிறப்பம்சங்கள்
பங்கேற்க தகுதி : 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணம் (ரூ.50/)-அய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்..
தேர்வுக்குரிய பாடம் : முன்பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு தந்தை பெரியார் பற்றிய ஆயிரம் செய்திகள் வினா-விடை வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு கையேடு வழங்கப்படும். அதிலிருந்து 45 வினாக்களைக் கொண்ட தேர்வு நடைபெறும்.
விடைத்தாள்: விடைத்தாள் '
Coding Sheet' வடிவமைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும். 45 வினாக்களைக் கொண்ட வினாத் தாளில், ஒவ்வொறு வினாவுக்கும் 4 விடைகள் (A, B, C, D)என கொடுக்கப்பட்டிருக்கும்.சரியான விடையைத் தெரிவு செய்து ,விடைத்தாளில் அதற்குரிய எழுத்தை முழுமையாக நிழலிட்டு நிரப்ப வேண்டும்.இறுதியாகக் கேட்கப்படும் வினாவிற்கு விளக்கமான விடை (எழுத்தில்) அளிக்க வேண்டும்.தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.கொள்குறி வினாவிற்கு தலா ஒரு மதிப்பெண் வீதம் 45 மதிப்பெண்களும், எழுத்து வினாவிற்கு 5 மதிப்பெண்களும் மொத்தம் 50 மதிப்பெண்களும் தேர்வு நடைப்பெறும்.
தேர்வு மொழி : தமிழ் / ஆங்கிலம்.